காங்கேசன்துறை குமார கோவில் பிள்ளையார் சிலை மாயம் - Yarl Voice காங்கேசன்துறை குமார கோவில் பிள்ளையார் சிலை மாயம் - Yarl Voice

காங்கேசன்துறை குமார கோவில் பிள்ளையார் சிலை மாயம்யாழ். காங்கேசன்துறை குமார கோவிலில் இருந்த பிள்ளையார் சிலையைக் காணவில்லை என காங்கேசன் துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை குமார கோவில் பகுதி உயர்பாதுகாப்பு
வலயமாக இருந்த காலப்பகுதியில் கோயில் வளாகத் தினுள் விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

பின்னர் அப்பகுதி மக்களிடம் கையளிக்கப்பட்டதை அடுத்து , குமார கோவில் புனரமைக்கப்பட்டு ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வந்தன.

இந்நிலையில் கடந்த 09ஆம் திகதி இரவு ஆலயத்தில் இருந்த விநாயகர் சிலை இருப்பிடத்தில் இருந்து பெயர்த்து எடுக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆலய வளாகத்தினுள் விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post