பொது மக்களின் காணிகளை கடற்படையினருக்கு வழங்குவதாக தாம் கூறவில்லை என்கிறார் வடக்கு ஆளுநர். - Yarl Voice பொது மக்களின் காணிகளை கடற்படையினருக்கு வழங்குவதாக தாம் கூறவில்லை என்கிறார் வடக்கு ஆளுநர். - Yarl Voice

பொது மக்களின் காணிகளை கடற்படையினருக்கு வழங்குவதாக தாம் கூறவில்லை என்கிறார் வடக்கு ஆளுநர்.மாதகல் காணிகளை  கடற்படைக்கு  வழங்குவதாக நான் ஒருபோதும் கருத்து தெரிவிக்கவில்லை என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.

வடமாகாண ஆளுநர் கடற்படைக்கு மாதகல் காணிகளை வழங்குவதாக தெரிவித்து சில ஊடகங்களில் நேற்று செய்திகள் வெளிவந்த நிலையில் இது தொடர்பில், இன்று தனியார் நிறுவனத்தின் நிகழ்வொன்றில்  கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு  கருத்து தெரிவிக்கும் போதே ஆளுநர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நேற்றைய தினம் நான் காணி உரிமையாளர்களுடன் பேசுவதாக வெளியான செய்தி பிழையானது.
இன்றைய தினமே முதன்முதலாக காணி உரிமையாளர்களுடன் நான் நேரடியாக கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளேன். 

காணி உரிமையாளர்கள் உடன் பேசி காணியின் உறுதிகளை சரி பார்த்து, காணி உரிமையாளர்களின் நிலைப்பாடுகளை அறிந்த பின்னரே முடிவுகளை எடுக்க முடியும் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post