ஜேர்மன் கலாசார பணிப்பாளர் யாழ் முதல்வர் சந்திப்பு - Yarl Voice ஜேர்மன் கலாசார பணிப்பாளர் யாழ் முதல்வர் சந்திப்பு - Yarl Voice

ஜேர்மன் கலாசார பணிப்பாளர் யாழ் முதல்வர் சந்திப்புஇலங்கைக்கான ஜேர்மனியின் கலாசார நிறுவன பணிப்பாளர் ஸ்டீபன் விங்லர் இன்றைய தினம் யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனை சந்தித்து கலந்துரையாடினார்.

இன்று மதியம் 2.30 மணியளவில் யாழ் மாநகர சபையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், யாழ்ப்பாணத்தில் ஜேர்மன் மொழியை பயிற்றுவிப்பது தொடர்பாகவும் ஜேர்மன் கலாசார நிகழ்வுகளை இங்கு உள்ளவர்களுடன் இணைந்து மேற்கொள்வது தொடர்பாகவும் ஒரு நட்பு ரீதியான சந்திப்பு இடம்பெற்றதாக யாழ் மாநகர முதல்வர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

இந்த சந்திப்புக்கு பின்னர் இலங்கைக்கான ஜேர்மனியின் கலாசார நிறுவன பணிப்பாளருக்கு யாழ் மாநகர முதல்வரால் நினைவுப்பரிசு வழங்கிவைக்கப்பட்டது.

எதிர்வரும் காலத்தில் ஜேர்மன் மொழி,கலாசாரம் சார்ந்த நூல்களை யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்துக்கு வழங்குவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post