இலங்கையில் அனைத்து மக்களையும் நேசிக்கக்கூடிய சிங்கள தலைமகனை சிங்கள மக்கள் இனிவரும் காலங்களில் தெரிவு செய்யவேண்டும் என்று நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
20 வருடங்களுக்கு மேலாக பொருளாதார தடைகளை தமிழர்கள் சந்தித்தனர். இன்று தான் சிங்கள மக்கள் இந்த தடைகளை புதிதாக எதிர்நோக்குகின்றனர் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
எரிபொருளுக்காக வரிசையில் நின்று நான்கு பேர் இறந்தார்கள் என்பதை கூறும்போது அது இலங்கைக்கு ஒரு அவமானகரமான கேவலமான விடயம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Post a Comment