மிரிஹான, பகிரிவத்த மாவத்தைக்கு அருகிலுள்ள ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் இல்லத்துக்குச் செல்லும் வழியில் நேற்றிரவு (31) வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவம் தொடர்பான விசாரணைகள் மூன்று விசேட குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இந்த விசாரணைகள் மூன்று குழுக்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவை கொழும்பு குற்றப்பிரிவு, சிஐடி, மேற்கு மற்றும் வடக்கு குற்றப் பிரிவுகள் ஆகும் என சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
"பொதுச் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்கள் இது குறித்து செய்தி வெளியிட தடை விதிக்க முடியாது. அது மக்களின் உரிமை. ஊடகவிய லாளர்கள் மீதான தாக்குதல் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” எனவும் தெரிவித்தார்.
Post a Comment