ஐபிஎல் கிரிக்கெட்டில் 52 ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது. இதில் நாணயச்சுழற்சியில் வென்ற பஞ்சாப் அணி துடுப்பெடுத்தாடியது.
தொடக்க வீரர்களாக பேர்ஸ்டோ-தவான் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். தவான் 12 இருக்கும் போது அஸ்வின் பந்து வீச்சில் அவுட் ஆனார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 47 ஓட்டங்களை எடுத்தது. அடுத்து வந்த ராஜபக்சா 27 ஓட்டங்களில் சாஹல் பந்தில் போல்ட் ஆனார்.
அடுத்ததாக களமிறங்கிய கப்டன் அகர்வால் 15, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பேர்ஸ்டோ அரை சதம் அடித்து சாஹல் பந்தில் அவுட் ஆனார். சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 189 ஓட்டங்கள் எடுத்தனர்.
ராஜஸ்தான் தரப்பில் சாஹல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்
குறித்த இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணி 19.4 ஓவர்களில் 190/4 என்று வெற்றி பெற்றது.
Post a Comment