நல்லூர் றோட்டறிக் கழகத்தினால் வயோதிபர் இல்லத்திற்கு உதவிகள் வழங்கி வைப்பு! - Yarl Voice நல்லூர் றோட்டறிக் கழகத்தினால் வயோதிபர் இல்லத்திற்கு உதவிகள் வழங்கி வைப்பு! - Yarl Voice

நல்லூர் றோட்டறிக் கழகத்தினால் வயோதிபர் இல்லத்திற்கு உதவிகள் வழங்கி வைப்பு!நல்லூர் ரோட்டரி கழகத்தினால் கொழும்புத்துறை வயோதிபர் இல்லத்துக்கு ஒருதொகை உணவுப்பொருட்கள் மற்றும் உடுபுடவைகள் வழங்கி வைக்கப்பட்டன.

 கொழும்புத்துறை வயோதிபர் இல்ல பொறுப்பதிகாரி யின் வேண்டுகோளின் அடிப்படையில் அவை வழங்கி வைக்கப்பட்டன. 

நல்லூர் ரோட்டரி கழகத்தலைவர் ரோட்டரியன் த.ரவினதாஸ் அவர்களினால் முதியோர் இல்ல பொறுப்பதிகாரி அருட்சகோதரி. பிரின்சில்லா அவர்களிடம் உதவிப் பொருட்கள்  கையளிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் நல்லூர் ரோட்டரி கழகத்தின் செயலாளர் எம்.ஜீர்த்தன், முன்னாள் தலைவர்.ஆர். ரோய் உட்பட பலர் கலந்து கொண்டனர். நல்லூர் ரோட்டரி கழகத்தின் 2022/2023 ஆண்டுக்கான முதலாவது செயற்திட்டம் இது  என்பது குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post