சிறிலங்கா தேசிய அணியில் வியாஸ்காந்த் - Yarl Voice சிறிலங்கா தேசிய அணியில் வியாஸ்காந்த் - Yarl Voice

சிறிலங்கா தேசிய அணியில் வியாஸ்காந்த்
யாழ்.மண்ணின் மைந்தன் வியாஸ்காந்த் நடைபெற்ற LPL தொடரில் சிறப்பாக விளையாடி தான் யார் என்று அடையாளம் காட்டியுள்ளான். கடந்த LPL தொடரில் ஒரு சில வாய்ப்புகளே அவனுக்கு கிடைத்தது. ஆனால் இத் தொடரில் 100% வாய்ப்புகள் கிடைத்தது. அதனை சரியான முறையில் பயன்படுத்தி தனது அபார திறமையை வெளிப்படுத்தினான்.

ஒரு போட்டியில் ஆட்டநாயகன் விருதும் இறுதிப் போட்டியில் வியாஸ்காந்த்
Emerging Player of LPL 2022 - பெற்றுள்ளான். மற்றும் இந்த தொடரில் தனது சுழல்பந்து வீச்சால் மொத்தமாக 13 விக்கெட்டுகளை வீழ்த்தினான்.

ஒரு தமிழனாக இலங்கை தேசிய அணியில் இவர் இடம்பிடிப்பார் என்று ஒட்டுமொத்த இலங்கை கிரிக்கெட் தமிழ் ரசிகர்களின் ஏக்கம் அனைவரிடத்திலும் உள்ளது.

சிந்திய வியர்வைக்கும் அவனது கடின உழைப்பிற்கும் விடாமுயற்சிக்கும் தனக்கொரு அடையாளத்தை ஏற்படுத்தி விட்டான். ESPNcricinfo பக்கத்தில் LPL சிறந்த 11பேர் வீரர் பட்டியலில் வியாஸ்காந்த் இடம்பிடித்துள்ளான்.

அனைத்து இலங்கை ரசிகர்களும் உனக்கு ஆதரவாக என்றும் இருப்பார்கள். இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை குழாமில் பெயரிடப்பட்டுள்ள பதினாறு பேர்களில் வியாஸும் ஒருவர். இறுதிப்பதினொருவருக்குள் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் சாதிப்பான்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post