அகில இலங்கை சைவ மகா சபை ஆண்டுதோறும் திருவெம்பாவை விரதத்தை முன்னிட்டு நடத்துகின்ற ஈழத்துச் சிதம்பர பாதயாத்திரை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெறவுள்ளது.
சைவத் தமிழ் மக்களிடையே ஆன்மீக சிந்தனையையும் அறநெறிப் பண்புகளையும் மேலோங்கச் செய்வதன் மூலம் மனித நேயம் மிக்க சிறந்த சமுதாயத்தை கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்டு 10 வருடங்களாக இப் பாத யாத்திரை நடத்தப்பட்டு வருகின்றது.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணிக்கு சம்பில்துறை சம்புநாத ஈச்சரத்தில், 21 அடி உயர சிவபெருமான் திருச்சொரூபத்திற்கு முன்பாக ஆரம்பிக்கும் பாத யாத்திரையானது சாந்தை, பனிப்புலம், பறாளாய், சுழிபுரம் மேற்கு, பெரியபுலோ ஆகிய பாதைகளுடாக நகர்;ந்து பொன்னாலை - மூளாய் இராவணேச்சரம் சென்று அங்கிருந்து காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தைச் சென்றடையும்.
கடந்த காலங்களைப் போன்று இவ் வருடமும் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் என பல இடங்களிலும் இருந்து நூற்றுக்கணக்கானோர் இப் பாதயாத்திரையில் பங்கெடுக்கவுள்ளனர்.
பாத யாத்திரையாகச் செல்லும் அடியவர்களுக்கு பொன்னாலைச் சந்தியிலுள்ள நாராயணன் தாகசாந்தி நிலையத்தினர் மதியம் அன்னதானம் வழங்குவர்.
பாதயாத்திரையில் கலந்துகொள்ள ஆர்வமுடைய அடியவர்கள் குறித்த நேரத்திற்கு, உரிய இடத்திற்கு வருகை தந்து கலந்துகொள்ள முடியும் என சைவ மகா சபை அறிவித்துள்ளது.
Post a Comment