முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் யாழில் வெளியீடு - Yarl Voice முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் யாழில் வெளியீடு - Yarl Voice

முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் யாழில் வெளியீடுதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் (அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்) தேர்தல் விஞ்ஞாபனம் இன்று யாழில் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வும் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்வு யாழ் நாச்சிமார் கோவில் அருகில் உள்ள சரஸ்வதி மண்டபத்தில் கட்சியின் இளைஞர் அணி தலைவர் சத்தியசீலன் தலைமையில் இன்று மாலை நடைபெற்றது.

இதன் போது கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளியிட்டு வைக்க கட்சியின் முக்கியஸ்தரான மாரிமுத்து கணபதிப்பிள்ளை மற்றும் கிந்துஜன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

 இந்நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் சட்ட ஆலோசர்களான சட்டத்தரணி சுகாஷ் மற்றும் காண்டீபன் உட்பட கட்சியின் முக்கிய பிரதிகளும் வேட்பாளர்கள் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post